தேசிய ஜூனியர் கபடி போட்டி: தமிழக அணிகள் அறிவிப்பு


தேசிய ஜூனியர் கபடி போட்டி: தமிழக அணிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2017 8:30 PM GMT (Updated: 9 Dec 2017 7:28 PM GMT)

44–வது தேசிய ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் வருகிற 12–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

44–வது தேசிய ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் வருகிற 12–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க செயலாளர் ஏ.‌ஷபியுல்லா அறிவித்துள்ளார். தமிழக ஜூனியர் கபடி அணிகள் வருமாறு:–

ஆண்கள் அணி: அப்துல் இன்சமாம் (புதுக்கோட்டை), ராதாகிருஷ்ணன் (கரூர்), அஜித்குமார் (கோவை), ஜெகன் (விருதுநகர்), சுப்பிரமணியன் (தூத்துக்குடி), ஜெயப்பிரகாஷ் (திருவாருர்), ராம்குமார் (நீலகிரி), பாலாஜி (தஞ்சாவூர்), சாரதி (தேனி), அய்யப்பன் (திருநெல்வேலி), சிவா (கன்னியாகுமரி), பொன்னார் (சேலம்), பயிற்சியாளர்: ஆர்.சாமியப்பன், மானேஜர்: ஜி.முருகநாதன்.

பெண்கள் அணி: தங்கம்மாள், சத்யபிரியா, ஸ்வேதா, சித்ரா (4 பேரும் திண்டுக்கல்), திவ்யா (தஞ்சாவூர்), பவித்ரா (மதுரை), ஜீவிதா (கோவை), கங்கா (சேலம்), கோகிலா (சென்னை), சினேகா (சிவகங்கை), புனிதா (கடலூர்), பிரியா (திருப்பூர்), பயிற்சியாளர்: எம்.நாகராஜ், மானேஜர்: கல்யாணசுந்தரம்.


Next Story