வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்ட தடகள பயிற்சியாளருக்கு 2 ஆண்டு தடை


வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்ட தடகள பயிற்சியாளருக்கு 2 ஆண்டு தடை
x
தினத்தந்தி 16 Dec 2017 10:45 PM GMT (Updated: 16 Dec 2017 7:51 PM GMT)

வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்ட தடகள பயிற்சியாளருக்கு 2 ஆண்டு தடை தமிழ்நாடு தடகள சங்கம் நடவடிக்கை.

சென்னை,

சென்னையில் உள்ள யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசனின் பயிற்சியாளராக இருந்தவர் எம்.வி.ராஜசேகர். 54 வயதான ராஜசேகர் தன்னிடம் பயிற்சி பெற்ற வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தமிழ்நாடு தடகள சங்கம் விசாரணை நடத்தியது. விசாரணையில் தவறு நடந்து இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து தடகள பயிற்சியாளர் ராஜசேகருக்கு 2 ஆண்டு காலம் தடை விதித்து தமிழ்நாடு தடகள சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் தடகளம் சம்பந்தமான எந்த நிகழ்ச்சியிலும் அவர் தடை காலத்தில் பங்கேற்க முடியாது.

Next Story