பிற விளையாட்டு

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், சிந்து + "||" + World super series Badminton

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், சிந்து

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், சிந்து
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார், சிந்து 10-வது உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் நடந்து வருகிறது.
துபாய்,

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யுபியுடன் மோதினார். 59 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-15, 21-18 என்ற நேர் செட்டில் சென் யுபியை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் அகானே யமாகுச்சி (ஜப்பான்) 17-21, 21-12, 21-19 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனோனை சாய்த்தார்.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, யமாகுச்சியை சந்திக்கிறார். ஏற்கனவே லீக்கில் சிந்து நேர் செட்டில் யமாகுச்சியை வீழ்த்தி இருந்தார். சிந்துவின் வெற்றிப்பயணம் இறுதிப்போட்டியிலும் நீடித்தால், கவுரவமிக்க இந்த போட்டியில் மகுடம் சூடிய முதல் இந்தியர் என்ற சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம்:‘கேள்விக்கு விடை கிடைத்து விட்டது’ - சிந்து பெருமிதம்
சீனாவில் நடந்த உலக டூர் பேட்மிண்டன் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பட்டம் வென்று புதிய சரித்திரம் படைத்தார்.
2. இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்
இந்தோனேசியாவில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையரில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்.
3. ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவின் சாய்னா நேவால் பேட்மிண்டன் கால் இறுதியில் தோல்வி
ஆசிய விளையாட்டு போட்டியின் பேட்மிண்டன் கால் இறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி அடைந்துள்ளார்.
4. ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவின் பி.வி. சிந்து பேட்மிண்டன் கால் இறுதியில் வெற்றி
ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளில் இந்தியாவின் பி.வி. சிந்து பேட்மிண்டன் கால் இறுதியில் இன்று வெற்றி பெற்றுள்ளார்.