வருமானம் இன்றி டாக்சி ஓட்டுனரான முன்னாள் இந்திய குத்துச்சண்டை வீரர்


வருமானம் இன்றி டாக்சி ஓட்டுனரான முன்னாள் இந்திய குத்துச்சண்டை வீரர்
x
தினத்தந்தி 10 Jan 2018 7:15 AM GMT (Updated: 10 Jan 2018 7:15 AM GMT)

இளம் தலைமுறை குத்துச்சண்டை வீரர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டிய முன்னாள் இந்திய குத்துச்சண்டை வீரர் லகா சிங், தனது வருமானத்திற்காக லுதியானாவில் டாக்சி ஓட்டுனராக பணியாற்றி வரும் அவலம் நேர்ந்துள்ளது.#LakhaSingh

லுதியானா

1994-ஆம் ஆண்டு ஹிரோஷிமா ஆசிய விளையாட்டு போட்டியில்  81 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற லகா சிங் தற்போது மாதம் வெறும் 8,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார்.

5 முறை தேசிய சாம்பியன், 1994-ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடைப்பெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற வீரர், மற்றும் அதே ஆண்டில் தஷ்கண்டில் நடைப்பெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற லகா சிங் இரண்டு வருட காலப்பகுதியில், மூன்று பதக்கங்களைப் அடுத்தடுத்துப் பெற்றார்.இவர் முன்னாள் ராணுவ வீரரும் ஆவார்.

1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தவர். இத்தனை பெருமைகள் இருந்தும் தற்போது அரசாங்கத்தின் கவனத்தில் இருந்து மறுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலைமையை குறித்து அவரிடம் கேட்கையில், "என் நிலைமையைப் பற்றி பஞ்சாப் அரசு, இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை கூட்டமைப்பு (IABF) ஆகியவற்றிற்கு  பல கடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனால் இதுவரை பதில் ஏதும் கிடைக்கவில்லை," என சிங் தெரிவிக்கின்றார்.

#AsianGames  #Formerboxer  #LakhaSingh

Next Story