தேசிய சீனியர் கைப்பந்து ரெயில்வே அணியிடம் தமிழகம் தோல்வி


தேசிய சீனியர் கைப்பந்து ரெயில்வே அணியிடம் தமிழகம் தோல்வி
x
தினத்தந்தி 22 Feb 2018 9:45 PM GMT (Updated: 22 Feb 2018 6:53 PM GMT)

பெண்களுக்கான ‘ஏ’ பிரிவு 2-வது லீக் ஆட்டத்தில் தமிழக அணி, இந்தியன் ரெயில்வேயை எதிர்கொண்டது.

கோழிக்கோடு,

66-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான ‘ஏ’ பிரிவு 2-வது லீக் ஆட்டத்தில் தமிழக அணி, இந்தியன் ரெயில்வேயை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 24-26, 11-25, 16-25 என்ற நேர்செட்டில் இந்தியன் ரெயில்வேயிடம் தோல்வி கண்டது. முதல் ஆட்டத்தில் தமிழக அணி, ஆந்திராவை வீழ்த்தி இருந்தது. முந்தைய நாளில் ஆண்களுக்கான ‘பி’ பிரிவில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் தமிழக அணி 20-25, 25-23, 25-18, 25-23 என்ற செட் கணக்கில் சர்வீசஸ் அணியை சாய்த்து முதல் வெற்றியை ருசித்தது. இந்த ஆட்டம் 1¾ மணி நேரம் நீடித்தது.

Next Story
  • chat