400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தேசிய சாதனை


400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தேசிய சாதனை
x
தினத்தந்தி 8 March 2018 10:00 PM GMT (Updated: 8 March 2018 7:13 PM GMT)

400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தேசிய சாதனை படைத்தார்.

பாட்டியாலா,

22-வது பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பாட்டியாவில் நடந்தது. இதன் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி 49.45 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அவர் அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றார். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த ஜோசப் ஆபிரகாம் 49.94 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. இந்த போட்டியில் தமிழக வீரர்கள் சந்தோஷ்குமார் 50.14 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ராமச்சந்திரன் 51.61 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

Next Story