தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தல்


தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தல்
x
தினத்தந்தி 22 March 2018 11:15 PM GMT (Updated: 22 March 2018 8:34 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தினார்.

சிட்னி,

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை இளவேனில் 249.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். முன்னதாக அவர் தகுதி சுற்றில் 631.4 புள்ளிகள் சேர்த்து புதிய உலக சாதனையும் படைத்தார். 18 வயதான இளவேனில் தமிழகத்தில் பிறந்தவர். தற்போது குஜராத்தில் வசிக்கிறார். ககன் நரங்கின் விளையாட்டு அகாடமியில் பயிற்சி எடுத்து வரும் இளவேனில், இந்த பதக்கத்தை தனது பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

Next Story