பிற விளையாட்டு

அகில இந்திய கைப்பந்து போட்டி: கேரளா போலீஸ் அணி ‘சாம்பியன்’ + "||" + All India Volleyball Tournament: Kerala Police team 'champion'

அகில இந்திய கைப்பந்து போட்டி: கேரளா போலீஸ் அணி ‘சாம்பியன்’

அகில இந்திய கைப்பந்து போட்டி: கேரளா போலீஸ் அணி ‘சாம்பியன்’
நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. ‘தினத்தந்தி’ மற்றும் எஸ்.என்.ஜெ., ஒய்.எம்.சி.ஏ.மெட்ராஸ் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் 5–வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாடு யூத்–கேரளா போலீஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கேரளா போலீஸ் அணி 17–25, 25–16, 25–13, 25–20 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு யூத் அணியை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியதுடன், முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு எஸ்.என்.ஜெ. நிர்வாக இயக்குனர் எஸ்.என்.ஜெயமுருகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் முன்னிலை வகித்தார். போலீஸ் ஏ.டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்ற கேரளா போலீஸ் அணிக்கு, எஸ்.என்.ஜெ. கோப்பையை வழங்கினார். அத்துடன் அந்த அணிக்கு ரூ.75 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2–வது இடம் பெற்ற தமிழ்நாடு யூத் அணிக்கு ஒய்.எம்.சி.ஏ.மெட்ராஸ் கோப்பையும், ரூ.60 ஆயிரமும், 3–வது இடம் பெற்ற தென் மத்திய ரெயில்வே அணிக்கு இ2இ கோப்பையுடன் ரூ.40 ஆயிரமும், 4–வது இடம் பெற்ற தெற்கு ரெயில்வே அணிக்கு டாக்டர் பி.டி.போஸ் நினைவு கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டன. சிறந்த வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்ட அஞ்சுமோஸ் (கேரளா போலீஸ்), ஷாலினி (தமிழ்நாடு யூத்), தேவிகா (தென் மத்திய ரெயில்வே), பூர்ணிமா (தெற்கு ரெயில்வே), சரண்யா (தமிழ்நாடு யூத்) ஆகியோரும் தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டது.

விழாவில் போஸ் பப்ளிக் பள்ளி தாளாளர் பீனா போஸ், இ2இ நிறுவன சேர்மன் அஞ்சலி அய்யர், ஸ்ரீ முகாம்பிகா நிறுவன நிர்வாக இயக்குனர் செல்வகணேஷ், பியல் சிட்டி பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ரமேஷ்குமார், ஒய்.எம்.சி.ஏ.மெட்ராஸ் சேர்மன் ரவிக்குமார் டேவிட், போட்டி அமைப்பு குழு செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், துணைசேர்மன் பி.பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. வாட்ஸ்-அப் வீடியோ காலில் பெண்ணிடம் ஆபாச பேச்சு: குமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 4 பிரிவுகளில் வழக்கு
வாட்ஸ்-அப் வீடியோ காலில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய குமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. சிவகங்கையில் தீப்பற்றி எரிந்த வேனில் சிக்கித்தவித்த ஆசிரியர்; போலீஸ்காரர் துரிதமாக செயல்பட்டு மீட்டார்
ஓடும் வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கிய ஆசிரியரை போலீஸ்காரர் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டார்.
3. கோவையை போல் தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நூலகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
கோவையை போல் தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நூலகம் திறக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
4. கூடலூரில் சாலையின் நடுவில் தடுப்புச்சுவர்: சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆட்டோக்களை அகற்ற எதிர்ப்பு
கூடலூரில் சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோக்களை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர்.
5. இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதி: கைதான 5 பேரின் போலீஸ் காவல் முடிந்தது; சிறையில் அடைப்பு
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில் கைதான 5 பேரின் போலீஸ் காவல் முடிவடைந்தது. இதனால் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.