2026-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த திட்டம்


2026-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த திட்டம்
x
தினத்தந்தி 19 April 2018 10:45 PM GMT (Updated: 19 April 2018 8:27 PM GMT)

2026-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாச் இந்தியா வந்துள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ராவுடன் ஆலோசனை நடத்திய அவர் மத்திய விளையாட்டு மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோரையும் சந்தித்து பேசினார். பின்னர் தாமஸ் பாச் முன்னிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா அளித்த பேட்டியில், ‘2026-ம் ஆண்டுக்கான இளையோர் ஒலிம்பிக் போட்டி, 2030-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த நாங்கள் உரிமம் கோரி விண்ணப்பிக்க இருக்கிறோம். ஆனால் இந்த போட்டிகளை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது எங்களுக்கு தெரியாது’ என்றார்.

இந்தியாவின் ஆர்வத்துக்கு பாராட்டு தெரிவித்த தாமஸ் பாச், ‘2022-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கு சில நாடுகள் ஏற்கனவே விண்ணப்பித்து அதனை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. அதனால் 2026-ம் ஆண்டுக்கான இளையோர் ஒலிம்பிக் போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு இந்தியா விண்ணப்பிக்க முடியும்’ என்றார்.

Next Story