வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் காலதாமதம் கூடாது -மத்திய மந்திரி ரத்தோர்


வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் காலதாமதம் கூடாது -மத்திய மந்திரி ரத்தோர்
x
தினத்தந்தி 30 April 2018 10:30 PM GMT (Updated: 30 April 2018 9:16 PM GMT)

வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் காலதாமதம் கூடாது என மத்திய மந்திரி ரத்தோர் கூறினார்.


ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் சமீபத்தில் நடந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியது. பதக்கம் வென்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் இந்திய அணியினருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டு மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசுகையில், ‘மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு வீரர்களின் தேவை மற்றும் பிரச்சினையை விரைவாக நிவர்த்தி செய்வதில் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் ஊக்கத்தொகை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தெரியவந்தால் அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். வீரர்கள் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டும் முன்பு தங்கள் பக்கம் தவறு இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Next Story