நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சாய் பிரனீத் அரைஇறுதிக்கு முன்னேற்றம்


நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சாய் பிரனீத் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 4 May 2018 10:30 PM GMT (Updated: 4 May 2018 6:52 PM GMT)

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் சாய் பிரனீத் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ஆக்லாந்து,

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சாய் பிரனீத் 21-7, 21-9 என்ற நேர்செட்டில் இலங்கை வீரர் நிலுகா கருணாரத்னேவை எளிதில் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இந்த வெற்றியை பெற அவருக்கு 29 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 19-21, 9-21 என்ற நேர்செட்டில் 5 முறை உலக சாம்பியனான சீனாவின் லின் டானிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 40 நிமிடம் நீடித்தது. ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் சுமித் ரெட்டி-மனு அட்ரி இணை 10-21, 15-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் போடின் இசரா-நிபித்பொன் ஜோடியிடம் தோல்வி கண்டு நடையை கட்டியது.

Next Story