ஒலிம்பிக்போட்டி மற்றும் தேக்வான்டோ அமைப்பு பயிற்சியாளர் மீது பாலியல் புகார்


ஒலிம்பிக்போட்டி மற்றும் தேக்வான்டோ அமைப்பு பயிற்சியாளர் மீது பாலியல் புகார்
x
தினத்தந்தி 8 May 2018 3:10 PM IST (Updated: 8 May 2018 3:10 PM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக்போட்டி மற்றும் தேக்வான்டோ அமைப்பு பயிற்சியாளர் மீது விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் கூறியுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ், 

அமெரிக்காவில் கெய்டி கில்பர்ட், மேன்டி மெலூன், ஆம்பர் மீன்ஸ் மற்றும் கேபி ஜோஸ்வின் ஆகிய  4  தேக்வான்டோ வீராங்கனைகள் கொலரடோ பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் அமெரிக்க ஒலிம்பிக் தேக்வான்டோ பயிற்சியாளர் ஜீன் லோபஸ், அவரது தம்பி ஸ்டீவன் ஆகியோர் தங்களிடம் பாலியல் வன்முறையில்  ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். ஸ்டீவன் 2 தடவை ஒலிம்பிக் சாம்பியன் ஆவார்.

வழக்கு தொடர்ந்த வீராங்கனைகளில் ஒருவரான மெலோன் 2 தடவை உலக சாம்பியன் ஆவார். எகிப்தில் 1997-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியின் போது பயிற்சியாளர் ஜீன் தன்னை கற்பழித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது அவருக்கு வயது 15.

மற்றொரு வீராங்கனையான கில்பர்ட் கூறிய புகாரில், 2002-ம் ஆண்டு ஈகுவேடரிலும், 2003-ம் ஆன்டு ஜெர்மனியிலும் பயிற்சியாளர் ஜீன் தன்னுடன் பாலியல் வன்முறையில்  ஈடுபட்டதாக கூறியுள்ளார். ஜீன் லோபஸ் சகோதரர்களின் பாலியல் வெறிக்கு இணங்காத வீராங்கனைகள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் அல்லது சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலியல்  புகாரில் சிக்கிய தேக்வான்டோ பயிற்சியாளர் ஜீன் லோபஸ் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க அமெரிக்க ஒலிம்பிக் சங்கம் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  விசாரணை நடைபெறுதால் அவரது தம்பிக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story