தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி


தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி
x
தினத்தந்தி 22 May 2018 3:11 AM GMT (Updated: 22 May 2018 3:11 AM GMT)

தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. #ThailandOpenTableTennis

பாங்காக்,

பாங்காக்கில் நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் சத்யன்-சனில் ஷெட்டி ஜோடி துவக்கத்தில் 3-1 என ஜப்பானையும், 3-0 என மலேசியாவையும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதியில் மற்றொரு இந்திய ஜோடியான ஹர்மீத் தேசாய்-மானவ் தாக்கரை எதிர் கொண்டு 3-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிபோட்டிக்கு முன்னேறினர்.

இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் டோபியாஸ் ஹிப்ளர்-கிலிஅன் ஓர்ட் இணையிடம் 11-9, 12-14, 9-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து சத்யன்-சனில் ஷெட்டி ஜோடி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

Next Story
  • chat