இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்


இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
x
தினத்தந்தி 31 May 2018 10:15 PM GMT (Updated: 31 May 2018 8:32 PM GMT)

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு 53 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

புதுடெல்லி, 

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு 53 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் சஞ்சிதா சானுவிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்து இருப்பதாகவும், இதனால் அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அறிவித்துள்ளது. அவரிடம் எப்போது? ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஊக்க மருந்து சர்ச்சை தகவல் வெளியானதை தொடர்ந்து சஞ்சிதா சானு, தேசிய பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மணிப்பூரை சேர்ந்த 24 வயதான சஞ்சிதா சானு 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story