சென்னை: மாநில ஜூனியர் நீச்சல் போட்டியில் டால்பின் அணி சாம்பியன்


சென்னை: மாநில ஜூனியர் நீச்சல் போட்டியில் டால்பின் அணி சாம்பியன்
x
தினத்தந்தி 5 Jun 2018 2:59 AM GMT (Updated: 2018-06-05T08:29:55+05:30)

சென்னையில் நடைபெற்ற மாநில ஜூனியர் நீச்சல் போட்டியில் எஸ்டிஏடி டால்பின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. #StateJuniorSwimming

சென்னை,

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான 35வது சப்ஜூனியர் மற்றும் 45வது ஜூனியர் நீச்சல் போட்டிகள் வேளச்சேரியில் உள்ள சர்வதேச நீச்சல்குள அரங்கில் நடைபெற்றன.

ஜூன் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் சிறுவர் பிரிவில் டர்டில்ஸ் அணி 281 புள்ளிகளும், சிறுமியர் பிரிவில் எஸ்டிஏடி.அணி 299 புள்ளிகளும் பெற்று சாம்பியன் பட்டம் வென்றன. அவர்கள் மொத்தமாக 55 பதக்கங்கள் வென்றனர். அதில் 29-தங்கம், 12-வெள்ளி, 14-வெண்கலம் ஆகியவை அடங்கும்.

இரண்டு பிரிவிலும் மொத்தம் 546 புள்ளிகள் பெற்ற சென்னையைச் சேர்ந்த எஸ்டிஏடி டால்பின் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. பரிசளிப்பு விழாவில் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை ஷைனி வில்சன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் கைலாசம், சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர். 

Next Story