மாநில பள்ளி கைப்பந்து பாரதியார் அணி வெற்றி


மாநில பள்ளி கைப்பந்து பாரதியார் அணி வெற்றி
x
தினத்தந்தி 19 July 2018 10:15 PM GMT (Updated: 19 July 2018 8:31 PM GMT)

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2–வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை, 

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2–வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் வேலம்மாள் (சென்னை) அணி 25–8, 25–5 என்ற நேர்செட்டில் கே.ஆர்.எம். பப்ளிக் (சென்னை) அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஆர்.பி.சி. (சென்னை) அணி 25–12, 25–17 என்ற நேர்செட்டில் பால குருகுலம் அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் ஆர்.வி.ஜி. (ஒசூர்), எஸ்.எம். (திருச்சி) அணிகள் வெற்றி பெற்றன. பெண்கள் பிரிவில் லீக் ஆட்டம் ஒன்றில் ஜேப்பியார் (சென்னை) அணி 25–9, 25–8 என்ற நேர்செட்டில் குண்டூர் சுப்பையா (சென்னை) அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் சத்ரியா (விருதுநகர்), ரோட்லர் (சென்னை), பாரதியார் (ஆத்தூர்), செயின்ட் ஜோசப்ஸ் (சென்னை), செயின்ட் மேரிஸ் (சேலம்), பிரசிடென்சி (சென்னை), புனித அமலா (வேளாங்கண்ணி), வேலம்மாள் (சென்னை) அணிகள் வெற்றி கண்டன.


Next Story