உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் மார்வன், ரோவன்


உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் மார்வன், ரோவன்
x
தினத்தந்தி 22 July 2018 10:00 PM GMT (Updated: 22 July 2018 8:13 PM GMT)

13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

சென்னை, 

13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் மார்வன் டாரெக் (எகிப்து) 11-9, 6-11, 11-8, 2-11, 11-8 என்ற செட் கணக்கில் போராடி சக நாட்டவர் ஓமர் எல் டோர்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் எகிப்தின் மோஸ்தபா அசல் 11-3, 11-7, 11-7 என்ற நேர் செட் கணக்கில் மோஸ்தபா எல் செர்டியை விரட்டினார். இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மார்வன் டாரெக்- மோஸ்தபா அசல் மோத உள்ளனர்.

பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோவன் எலராபி (எகிப்து) 11-5, 13-11, 11-6 என்ற நேர் செட் கணக்கில் 40 நிமிடங்களில் சக நாட்டவர் ஜனா ஷிகாவை வெளியேற்றி இறுதிசுற்றை எட்டினார். மற்றொரு அரைஇறுதியில் எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமி 11-6, 8-11, 11-4, 11-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் லுசி டர்மலை தோற்கடித்தார்.


Next Story