பிற விளையாட்டு

4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளம் - சென்னையில் இன்று தொடக்கம் + "||" + 4 thousand players, junior athlete - Start in Chennai today

4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளம் - சென்னையில் இன்று தொடக்கம்

4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளம் - சென்னையில் இன்று தொடக்கம்
4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளப் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்க உள்ளன.
சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 33-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். 146 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டியின் அடிப்படையில் குண்டூரில் செப்டம்பர் 15 மற்றும் 16-ந் தேதி நடைபெறும் 30-வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டி, ராஞ்சியில் நவம்பர் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெறும் 34-வது தேசிய ஜூனியர் தடகள போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் தாக்குதல்: மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
2. சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்
மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் தமிழகம் திரும்புகிறார்.
3. சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம்
சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்துள்ளன. டீசல் விலையும் உயர்ந்துள்ளது.