ஸ்குவாஷ் போட்டி: இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதி


ஸ்குவாஷ் போட்டி: இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதி
x
தினத்தந்தி 24 Aug 2018 10:00 PM GMT (Updated: 24 Aug 2018 7:14 PM GMT)

ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

ஜகர்தா,

ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 3-1 என்ற செட் கணக்கில் சக வீரர் ஹரிந்தர் பால் சந்துவை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டங்களில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் 3-0 என்ற செட் கணக்கில் மிசாகியையும் (ஜப்பான்), ஜோஷ்னா சின்னப்பா (இந்தியா) 3-1 என்ற கணக்கில்ஹோ லிங் சானையும் (ஹாங்காங்) வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினர். அரைஇறுதியை எட்டியதன் மூலம் சவுரவ் கோஷல், தீபிகா, ஜோஷ்னா ஆகியோருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியாகியிருக்கிறது.

Next Story