ஆசிய விளையாட்டுப்போட்டி: பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டுப்போட்டி தொடரில், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.
ஜகார்தா,
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10-வது நாளான இன்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூயிங்கை இந்தியாவின் பிவி சிந்து எதிர்கொண்டார்.
இந்தப்போட்டியில், 21-13,21-16 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதன்மூலம், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story