தென் மண்டல தடகளம்: தமிழக வீரர் அரவிந்த் தங்கம் வென்றார்

30–வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று தொடங்கியது.
குண்டூர்,
30–வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடந்த ‘டிரிபிள் ஜம்ப்’ (மும்முறை தாண்டுதல்) போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் 15.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கமும், மற்றொரு தமிழக வீரர் அசுல் டோனி 14.56 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், கேரளா வீரர் வித்வின் 14.54 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் வென்றனர். தங்கம் வென்ற அரவிந்த், வெள்ளி பெற்ற அசுல் டோனி ஆகிய இருவரும் சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
Related Tags :
Next Story