பிற விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி + "||" + Korea Open Badminton: Saina won in the first round

கொரியா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி

கொரியா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி
கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சியோல் நகரில் நடந்து வருகிறது.

சியோல், 

கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–12, 21–11 என்ற நேர்செட்டில் 39–ம் நிலை வீராங்கனையான கிம் ஹோ மின்னை (தென்கொரியா) வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 40 நிமிடம் நீடித்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி ரெட்டி ஜக்காவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மாவும் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.


அதிகம் வாசிக்கப்பட்டவை