ஆசிய பாரா விளையாட்டு போட்டி; உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களை தட்டி சென்ற இந்திய வீரர்கள்


ஆசிய பாரா விளையாட்டு போட்டி; உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களை தட்டி சென்ற இந்திய வீரர்கள்
x
தினத்தந்தி 11 Oct 2018 1:49 PM GMT (Updated: 11 Oct 2018 1:49 PM GMT)

ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் 3 பதக்கங்களையும் தட்டி சென்றனர்.

ஜகர்த்தா,

இந்தோனேசியாவில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் இன்று 3 பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

நடப்பு சாம்பியனான இந்திய வீரர் சரத் குமார் 2 சாதனைகளை படைத்ததுடன் தொடர்ந்து 2வது முறையாக தங்க பதக்கம் வென்றுள்ளார்.  26 வயது நிறைந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி வென்றவரான இவர் 1.90 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கம் தட்டி சென்றார்.

இதேபோன்று ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற வருண் பாட்டி (1.82 மீ) வெள்ளி பதக்கமும், ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேலு மாரியப்பன் (1.67 மீ) வெண்கலமும் வென்றுள்ளனர்.


Next Story