இளையோர் ஒலிம்பிக்: இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம்


இளையோர் ஒலிம்பிக்: இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம்
x
தினத்தந்தி 17 Oct 2018 3:45 AM IST (Updated: 17 Oct 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

இளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

பியூனஸ் அயர்ஸ்,

3-வது இளையோர் ஒலிம்பிக் (யூத்) போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் ஈகுவடார் வீரர் ஆஸ்கார் புதின் 40 நிமிடம் 51.86 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்திய வீரர் சுராஜ் பன்வார் 40 நிமிடம் 59.17 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 11-வது பதக்கம் இதுவாகும்.

பின்னர் 17 வயதான சுராஜ் பன்வார் கூறும் போது, ‘பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக கடினமாக உழைத்தேன். இலக்கை இதை விட சிறந்த நிலையில் எட்ட வேண்டும், சீனியர் அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு’ என்றார்.

1 More update

Next Story