பிற விளையாட்டு

உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டியில் பஜ்ரங் பூனியா தோல்வி வெள்ளிப்பதக்கம் வென்றார் + "||" + World Wrestling Final Bajrang Punya fail Silver won

உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டியில் பஜ்ரங் பூனியா தோல்வி வெள்ளிப்பதக்கம் வென்றார்

உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டியில் பஜ்ரங் பூனியா தோல்வி வெள்ளிப்பதக்கம் வென்றார்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
புடாபெஸ்ட்,

இதில் பிரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா, ஜப்பான் வீரர் தகுடோ ஒடோகுரோவை சந்தித்தார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பஜ்ரங் பூனியா 9-16 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். அரியானாவை சேர்ந்த 24 வயதான பஜ்ரங் பூனியா இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.