பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஜாங்கை பழிதீர்த்தார், சிந்து


பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஜாங்கை பழிதீர்த்தார், சிந்து
x
தினத்தந்தி 23 Oct 2018 9:45 PM GMT (Updated: 23 Oct 2018 7:42 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஜாங்கை வீழ்த்தி சிந்து வெற்றிபெற்றார்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-17, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பீவென் ஜாங்கை (அமெரிக்கா) விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 34 நிமிடங்களே தேவைப்பட்டது. இதன் மூலம் கடந்த வாரம் டென்மார்க் ஓபனில் முதல் சுற்றில் ஜாங்கிடம் அடைந்த தோல்விக்கு சிந்து பழிதீர்த்துக் கொண்டார். சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், சமீர் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் இன்று களம் காணுகிறார்கள்.


Next Story