புரோ கபடி: குஜராத்திடம் வீழ்ந்தது தலைவாஸ்


புரோ கபடி: குஜராத்திடம் வீழ்ந்தது தலைவாஸ்
x
தினத்தந்தி 26 Oct 2018 9:15 PM GMT (Updated: 26 Oct 2018 8:45 PM GMT)

6–வது புரோ கபடி திருவிழாவில் நேற்றிரவு பாட்னாவில் அரங்கேறிய 34–வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை சந்தித்தது.

பாட்னா, 

6–வது புரோ கபடி திருவிழாவில் நேற்றிரவு பாட்னாவில் அரங்கேறிய 34–வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை சந்தித்தது. இதில் முதல் பாதியில் 14–16 என்ற கணக்கில் சற்று பின்தங்கி இருந்த தமிழ் தலைவாஸ் அணி பிற்பாதியில் எதிரணியின் ‘பிடி’யில் சிக்கி நிலைகுலைந்தது. இரண்டு முறை ஆல்–அவுட் ஆன தமிழ் தலைவாஸ் அணி 25–36 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியிடம் பணிந்தது. 8–வது ஆட்டத்தில் ஆடிய தலைவாஸ் அணிக்கு இது 6–வது தோல்வியாகும். முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 41–30 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது. இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர்–பெங்கால் (இரவு 8 மணி), பாட்னா–யு மும்பா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story