துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 16 Dec 2018 10:30 PM GMT (Updated: 16 Dec 2018 9:29 PM GMT)

மொகாலியில் நடந்து வரும் தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 479 ரன்கள் குவித்தது.


* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 6-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை நொறுக்கியது. மும்பை அணி வீரர் மோடோவ் சாகோவ் (12, 15, 30, 90-வது நிமிடம்) ஐ.எஸ்.எல். தொடரில் ஒரு ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

* புரோ கபடி லீக் தொடரில் பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தா 47-31 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சையும், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 34-29 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சையும் வென்றது.

* ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமண்ட்ஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நானும், இந்திய வீரர் ஹர்பஜன்சிங்கும் இணைந்து ஆடிய போது ஒரு நிகழ்ச்சியில் என்னை தனியே அழைத்து பேசிய அவர் 2008-ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியின் போது நடந்த சம்பவத்துக்காக (குரங்கு என்று திட்டிய விவகாரம்) மன்னிப்பு கேட்டார். நான் அப்படி பேசியிருக்கக்கூடாது என்று கூறி கண்ணீர் விட்டார்.’ என்று கூறியுள்ளார்.

* மொகாலியில் நடந்து வரும் தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 479 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

* வெலிங்டனில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்து 29 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. டாம் லாதம் (121 ரன்) சதம் அடித்தார்.


Next Story