தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக அணி அரைஇறுதிக்கு தகுதி


தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 7 Jan 2019 10:30 PM GMT (Updated: 7 Jan 2019 10:03 PM GMT)

தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில், தமிழக அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.

சென்னை,

67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25-14, 25-17, 25-23 என்ற நேர்செட்டில் ஆந்திரா அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்னொரு கால்இறுதியில் தமிழக அணி 25-20, 23-25, 25-20, 25-20 என்ற செட் கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரெயில்வே அணி 25-13, 25-15, 25-11 என்ற நேர்செட்டில் டெல்லி அணியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. மற்றொரு கால்இறுதியில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25-12, 25-16, 25-12 என்ற நேர்செட்டில் அரியானாவை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.


Next Story