மாநில பெண்கள் கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’


மாநில பெண்கள் கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 17 Jan 2019 9:51 PM GMT (Updated: 17 Jan 2019 9:51 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் அருகே உள்ள தூசூரில் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

நாமக்கல், 

பெண்கள் கைப்பந்து போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. லீக் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. அந்த அணிக்கு கோப்பை மற்றும் ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. 

இதேபோல் 2-வது இடத்தை பிடித்த பொள்ளாச்சி புளூ ஸ்டார் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரமும், 3-வது இடத்தை பிடித்த கோவை கிருஷ்ணம்பாள் கல்லூரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் டாக்டர் சிவந்தி கிளப் செயலாளர் சித்திரை பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

இதில் நாமக்கல் மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பொருளாளர் அருணகிரி, செயலாளர் சதாசிவம், இணை செயலாளர்கள் சிவநேசன், கனகராஜ் மற்றும் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story