துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 18 Jan 2019 10:15 PM GMT (Updated: 18 Jan 2019 8:01 PM GMT)

நெல்லை பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தென்னிந்திய கைப்பந்து போட்டி நெல்லையில் நடந்தது.


* நெல்லை பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தென்னிந்திய கைப்பந்து போட்டி நெல்லையில் நடந்தது. இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 17-25, 25-17, 26-24 என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோசப்ஸ் (கேரளா) அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

* 9-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-சாய் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில், மத்திய தலைமை செயலக அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

* சென்னையின் எப்.சி. சார்பில் பூஸ்ட் ஆதரவுடன் 13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளியில் வருகிற 28-ந் தேதி முதல் பிப்ரவரி 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இரண்டு பிரிவுகளிலும் தலா 32 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இந்த இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளில் இடம் பெறும் வீரர்களுக்கு சென்னையின் எப்.சி. நிர்வாகம் சார்பில் பயிற்சி அளிக்கப்படும்.

* ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவும்யாஜித் கோஷ் மீது அவரது மனைவி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பாராசட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சவும்யாஜித் தன்னை துன்புறுத்துவதாகவும், நம்பிக்கை மோசடி குற்றத்தில் ஈடுபடுகிறார் என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ‘என்னுடைய மனைவி அளித்து இருக்கும் புகாரில் உண்மையில்லை’ என்று சவும்யாஜித் மறுத்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சவும்யாஜித் மீது இதே இளம்பெண் கற்பழிப்பு புகார் தெரிவித்து இருந்தார். அதன் பிறகு இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு கடந்த ஆகஸ்டு 3-ந் தேதி அவரையே சவும்யாஜித் திருமணம் செய்து கொண்டார். திருமணமான 5 மாதத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை உருவாகி இருக்கிறது.

* பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்கிறது.

* ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்களூருவில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான கால்இறுதியில் 184 ரன்கள் இலக்கை நோக்கி 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி அந்த இலக்கை 47.5 ஓவர்களில் எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரைஇறுதியை எட்டியது.


Next Story