பிற விளையாட்டு

மலேசிய பேட்மிண்டன்: அரைஇறுதியில் சாய்னா + "||" + Malaysian badminton: In semi-final saina

மலேசிய பேட்மிண்டன்: அரைஇறுதியில் சாய்னா

மலேசிய பேட்மிண்டன்: அரைஇறுதியில் சாய்னா
மலேசிய பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதிக்கு சாய்னா நேவால் தகுதிபெற்றார்.
கோலாலம்பூர்,

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முன்னாள் உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொண்டார். 48 நிமிடம் நீடித்த இந்த மோதலில் சாய்னா 21-18, 23-21 என்ற நேர்செட்டில் ஒகுஹராவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் சாய்னா, 3 முறை உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) இன்று சந்திக்கிறார்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 23-21, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சன் வான் ஹோனிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.