துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 23 Jan 2019 10:15 PM GMT (Updated: 23 Jan 2019 7:56 PM GMT)

இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி மதிய உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்தது.

* திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் கேப்டன் சாம் பில்லிங்சின் சதத்தின் (108 ரன்) உதவியுடன் லயன்ஸ் நிர்ணயித்த 286 ரன்கள் இலக்கை இந்திய ‘ஏ’ அணி 49.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் ரஹானே (59 ரன்), இஷன் கிஷான் (57 ரன்) அரைசதம் அடித்தனர்.

* 11-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 8-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் லுகோவ்ஸ்கோ மேக்சிம் 48-வது காய் நகர்த்தலில் பெலாரசின் ஸ்டபக் கிரிலை தோற்கடித்தார். இன்னும் 2 சுற்று எஞ்சியுள்ள நிலையில் மேக்சிம் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

* இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நேற்று தொடங்கியது. இதில் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 7-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் தினார் டியா ஆஸ்டினை (இந்தோனேஷியா) வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 22-24, 21-8, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் லீ சூய்ருயை போராடி விரட்டினார். இந்திய வீரர் ஸ்ரீகாந்தும் தனது முதலாவது சுற்றில் வெற்றி பெற்றார்.

Next Story