பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியுள்ளார்.

* இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விலகியுள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்லீன் டியோல் இடம் பெறுகிறார். இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி மும்பையில் நாளை நடக்கிறது.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை கடந்த 2017-ம் ஆண்டு அணுகி அவரை முறைகேட்டில் ஈடுபட வைக்க முயற்சித்த சார்ஜாவை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர் இர்பான் அன்சாரிக்கு, கிரிக்கெட் தொடர்பான பணிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு ஐ.சி.சி. இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-புனே சிட்டி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி- எப்.சி.கோவா (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

* அகில இந்திய பல்கலைக்கழக செபக்தக்ரா போட்டி கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள குவெம்பு பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் யுகேஷ், விக்னேஸ்வரன், ராஜா ஆகியோர் அடங்கிய அண்ணா பல்கலைக்கழக அணி (சென்னை) வெண்கலப்பதக்கத்தை வென்றது. இதேபோல் ‘ரெகு’ பிரிவில் காசியானந்தா, அஜய் ஆதவன், தெய்வசண்முக சுந்தர், சக்தி, விக்னேஷ், முகேஷ்துரை ஆகியோர் அடங்கிய அண்ணா பல்கலைக்கழக அணி வெண்கலப்பதக்கம் பெற்றது. பதக்கம் வென்ற வீரர்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா பாராட்டினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது - இங்கிலாந்து நாடாளுமன்ற குழு
இந்தியாவுடனான பெரும்பாலான உறவுகளை மேற்கொள்ள இங்கிலாந்து தனது வாய்ப்பை தவறவிட்டது என்று பிரிட்டிஷ் குழு தெரிவித்துள்ளது!!
2. பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
3. பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி? மலிங்கா விளக்கம்
பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
24 அணிகள் பங்கேற்றுள்ள 8–வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.
5. இங்கிலாந்து அணியின் சவாலை சமாளிக்குமா இலங்கை இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து–இலங்கை அணிகள் மோதுகின்றன.