புரோ கைப்பந்து லீக் கோப்பையை வெல்வது யார்? சென்னை-கோழிக்கோடு அணிகள் இன்று பலப்பரீட்சை


புரோ கைப்பந்து லீக் கோப்பையை வெல்வது யார்? சென்னை-கோழிக்கோடு அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 8:39 PM GMT)

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் கோப்பையை வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஜெரோம் வினித் தலைமையிலான கோழிக்கோடு ஹீரோஸ்-ஷெல்டன் மோசஸ் தலைமையிலான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கோழிக்கோடு அணி தோல்வியை சந்திக்காமல் கம்பீரமாக இறுதி சுற்றுக்கு வந்திருக்கிறது. அதே சமயம் லீக்கில் 2 வெற்றி, 3 தோல்வியை சந்தித்த சென்னை அணி அரைஇறுதியில் கொச்சி புளூ ஸ்பைக்கர்சை போராடி விரட்டியது.

கோழிக்கோடு அணியில் ஜெரோம் வினித், அஜித் லால், பால் லோத்மன் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். சென்னை அணியில் ருடிவெரோப், ருஸ்லான்ஸ், நவீன்ராஜா ஜேக்கப் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் காணும் சென்னை அணி, லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

Next Story