பிற விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம் + "||" + World Cup shootings: disappointment to India

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 61 நாடுகளை சேர்ந்த 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஏற்கனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அபுர்வி சண்டிலாவும், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரியும் புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றனர். நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் செர்ஜி காமன்ஸ்கி 249.4 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். சீன வீரர்கள் லூ யுகுன் 247 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஹூய் ஜிசெங் 225.9 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்த பந்தயத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள் திவ்னாஷ்சிங் பன்வார் (627.2 புள்ளிகள்) 12-வது இடமும், ரவிகுமார் (627 புள்ளிகள்) 14-வது இடமும், தீபக்குமார் (624.3 புள்ளிகள்) 34-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்து தகுதி சுற்றுடன் வெளியேறினார்கள். இதனால் நேற்று பதக்க வேட்டையில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.தொடர்புடைய செய்திகள்

1. சீனா- பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அதிகரிக்கிறது : இந்தியா அதே நிலையில் உள்ளது
சீனா- பாகிஸ்தான் தங்கள் அணு ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன. இந்தியா அதே நிலையில் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
2. உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் மீண்டும் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
3. வெற்றி வரலாறு தொடருமா? - பாகிஸ்தான் அணியை இன்று சந்திக்கிறது, இந்தியா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுடன் கோதாவில் இறங்குகிறது.
4. உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
உலக வில்வித்தையில், இந்தியா 2 வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது.
5. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்
இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.