ஹெப்டத்லானில் இந்திய வீராங்கனை ஸ்வப்னாவுக்கு வெள்ளிப்பதக்கம்


ஹெப்டத்லானில் இந்திய வீராங்கனை ஸ்வப்னாவுக்கு வெள்ளிப்பதக்கம்
x
தினத்தந்தி 23 April 2019 11:23 PM GMT (Updated: 23 April 2019 11:23 PM GMT)

ஹெப்டத்லானில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தோகா,

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர்தடை ஓட்டம் உள்பட 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் மொத்தம் 5,993 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். உஸ்பெகிஸ்தான் வீராங்கனை எகடெரினா வோர்னினா 6,198 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 22 வயதான ஸ்வப்னா பர்மன் இரண்டு கால்களிலும் தலா 6 விரல்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறுகையில், ‘2-வது இடம் பிடித்தது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஈட்டி எறிதலில் எனது செயல்பாடு சரியில்லை. அது மட்டுமின்றி கணுக்காலில் வலி காரணமாக என்னால் நன்றாக தயாராக முடியவில்லை’ என்றார்.


Next Story