துளிகள்
8 அணிகள் இடையிலான 2-வது மும்பை லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மே 14-ந் தேதி தொடங்குகிறது.
* 8 அணிகள் இடையிலான 2-வது மும்பை லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மே 14-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் கடந்த சீசனில் ஆடிய 6 அணிகள் மொத்தம் 11 வீரர்களை தக்க வைத்து இருக்கிறது. வட மும்பை பாந்தர்ஸ் அணி பிரித்வி ஷாவையும், மும்பை நார்த் ஈஸ்ட் அணி சூர்யகுமார் யாதவ், ஆகாஷ் பார்கரையும், சிவாஜி பார்க் லயன்ஸ் அணி ஷிவம் துபே, சித்தேஷ் லாத்தையும், பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், விக்கெட் கீப்பர் ஏக்நாத் கெர்காரையும் தக்க வைத்துள்ளன.
* ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட்இண்டீசை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது மனதை கவர்ந்த வீரர்களில் லோகேஷ் ராகுலும் ஒருவர். அவர் விராட்கோலி போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். அவர் இந்திய அணிக்கு நீண்ட காலம் பங்களிப்பார். அவர் நெருக்கடிக்கு ஆளாகாமல் தனது ஆட்டத்தை தொடர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
* இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து, வீரர் அங்குர் மிட்டல் ஆகியோரின் பெயரை ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கும், வீராங்கனை அஞ்சும் மோட்ஜில், வீரர்கள் ஷாஜர் ரிஸ்வி, ஓம்பிரகாஷ் மிதர்வால் ஆகியோரின் பெயரை அர்ஜூனா விருதுக்கும் தேசிய ரைபிள் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
* ஸ்பெயின் நாட்டில் நடந்த பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-0 என்ற நேர்செட்டில் 14-ம் நிலை வீரரான டேனில் மெட்விடேவை (ரஷியா) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
* நடப்பு ஐ.பி.எல். போட்டியின் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டம் மற்றும் இறுதிப்போட்டி இரவு 8 மணிக்கு பதிலாக ½ மணி நேரம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Tags :
Next Story