அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி


அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி
x
தினத்தந்தி 25 May 2019 10:15 PM GMT (Updated: 25 May 2019 9:02 PM GMT)

அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை,

அகில இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தெலுங்கானா வீராங்கனை காயத்ரி கோபிசந்த் 16-21, 10-21 என்ற நேர்செட்டில் டெல்லி வீராங்கனை ஆஷி ரவாத்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். காயத்ரி இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் ஆவார்.

Next Story