காமன்வெல்த் போட்டி புறக்கணிப்பா? இந்திய ஒலிம்பிக் சங்கம் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது - மத்திய மந்திரி அதிரடி


காமன்வெல்த் போட்டி புறக்கணிப்பா? இந்திய ஒலிம்பிக் சங்கம் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது - மத்திய மந்திரி அதிரடி
x
தினத்தந்தி 25 Jun 2019 11:09 PM GMT (Updated: 25 Jun 2019 11:09 PM GMT)

காமன்வெல்த் போட்டி புறக்கணிப்பது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என மத்திய மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவை நீக்குவது என்று காமன்வெல்த் விளையாட்டு நிர்வாக கமிட்டி கடந்த வாரம் முடிவு செய்தது. துப்பாக்கி சுடுதலில் தான் இந்தியா அதிகமான பதக்கங்களை அள்ளி குவித்து வருகிறது. அதை நீக்கியதால் அதிருப்திக்குள்ளான இந்திய ஒலிம்பிக் சங்கம், காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.

இந்த விவகாரம் குறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘இது குறித்து நாங்கள் துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்திடம் எதுவும் விவாதிக்கவில்லை. அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. ஆனால் காமன்வெல்த் போட்டியை புறக்கணிக்கும் முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் தன்னிச்சையாக எடுக்க முடியாது. எது என்றாலும் மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். விரைவில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் பேசுவோம்’ என்றார்.

Next Story