ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சாய் பிரனீத் தோல்வி


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சாய் பிரனீத் தோல்வி
x
தினத்தந்தி 27 July 2019 11:43 PM GMT (Updated: 27 July 2019 11:43 PM GMT)

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் சாய் பிரனீத் தோல்வி அடைந்தார்.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத், நம்பர் ஒன் வீரரான கென்டோ மோமோடாவை (ஜப்பான்) எதிர்கொண்டார். 45 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 18-21, 12-21 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


Next Story