மாநில கூடைப்பந்து: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி


மாநில கூடைப்பந்து: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 4 Nov 2019 11:18 PM GMT (Updated: 4 Nov 2019 11:18 PM GMT)

மாநில கூடைப்பந்து போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிபெற்றது.

சென்னை,

மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 18 அணிகளும், பெண்கள் பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றுள்ளன. 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு ஆட்டங்களில் விளையாட்டு விடுதி (சென்னை) அணி 69-49 என்ற புள்ளி கணக்கில் தெம்பவானி (மதுரை) அணியையும், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அணி 75-74 என்ற புள்ளி கணக்கில் எம்.எம்.பி.சி. (காஞ்சீபுரம்) அணியையும், வருமான வரி அணி 89-64 என்ற புள்ளி கணக்கில் திருவேணி (சேலம்) அணியையும் தோற்கடித்தன. பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டங்களில் இந்துஸ்தான் ஜாமெர்ஸ் அணி 56-25 என்ற புள்ளி கணக்கில் அல்வெர்னியா பள்ளியையும் (கோவை), அரைஸ் ஸ்டீல் அணி 57-16 என்ற புள்ளி கணக்கில் மெட்ராஸ் நேஷனல் அணியையும் வென்றன.

Next Story