உலக பேட்மிண்டனில் பட்டம் வென்று ஜப்பான் வீரர் மோமோட்டா சாதனை


உலக பேட்மிண்டனில் பட்டம் வென்று ஜப்பான் வீரர் மோமோட்டா சாதனை
x
தினத்தந்தி 15 Dec 2019 11:03 PM GMT (Updated: 15 Dec 2019 11:03 PM GMT)

உலக பேட்மிண்டனில் பட்டம் வென்று ஜப்பான் வீரர் மோமோட்டா சாதனை படைத்தார்.

குவாங்ஜோவ்,

முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நடந்து வந்தது. இதில் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான சென் யூ பே (சீனா) 12-21, 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் தாய் ஜூ யிங்கை (சீனதைபே) வீழ்த்தி மகுடம் சூடினார்.

இதன் ஆண்கள் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரரும், உலக சாம்பியனுமான கென்டோ மோமோட்டா (ஜப்பான்) 17-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் அந்தோணி சினிசுகாவை (இந்தோனேஷியா) போராடி வீழ்த்தி பட்டத்தை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 1 மணி 27 நிமிடங்கள் நடந்தது. 25 வயதான மோமோட்டா இந்த ஆண்டில் கைப்பற்றிய 11-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஒரு சீசனில் அதிக பட்டங்கள் வென்றவரான மலேசியாவின் லீ சோங் வெய்யின் (2010-ம் ஆண்டில் 10 பட்டம்) சாதனையை முறியடித்தார்.

Next Story