பிற விளையாட்டு

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல் + "||" + First Test cricket: Sri Lanka-Zimbabwe teams clash today

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்
இலங்கை-ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

* இந்திய வில்வித்தை சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மத்திய மந்திரி அர்ஜூன் முன்டா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராவ் ஆகியோர் போட்டியிட்டனர். அர்ஜூன் முன்டா 34-18 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ராவை வீழ்த்தி தலைவர் பதவிக்கு தேர்வானார். அர்ஜூன் முன்டா அணியை சேர்ந்த பிரமோத் சந்துர்கார் (மராட்டியம்) பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலிலும், ராஜேந்தர் சிங் தோமர் (உத்தரகாண்ட்) பொருளாளர் பதவிக்கான தேர்தலிலும் வெற்றி பெற்றனர்.


* இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தேர்வு குழு உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் வருகிற 24-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்திய பெண்கள் அணி தேர்வு குழு உறுப்பினர் மற்றும் ஜூனியர் அணி தேர்வு குழு உறுப்பினர் பதவிக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இருக்கின்றன.

* ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நடந்து வருகிறது. இதில் பிரீஸ்டைல் 65 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா அரைஇறுதியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் உக்ரைன் வீரர் வாசில் ஷூப்தாரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 74 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஜிதேந்தர் கால் இறுதியிலும், 84 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா தொடக்க சுற்றிலும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.

* கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. போர்க்குற்ற விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவிப்பு: ‘இலங்கைக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்’ - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
‘போர்க்குற்ற விசாரணையில் இருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துள்ளதற்கு நட்பு நாடுகளை திரட்டி அந்நாட்டிற்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்’ என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி படுதோல்வி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
3. ஐ.நா. சபையில் இலங்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
போர்க்குற்ற விசாரணையிலிருந்து வெளியேறத் துடிக்கும் இலங்கைக்கு, ஐ.நா. சபையில் இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் ; அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை
ராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
5. இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியா வருகை
இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.