இலங்கை-ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவானது
இலங்கை -ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவானது. இதன்முலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 71-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 6-வது வெற்றியை பதிவு செய்தது. 44-வது நிமிடத்தில் டிகோ கார்லஸ் கோல் அடித்தார். கொச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
*கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் உறுப்பினர்களாக இந்திய முன்னாள் வீரர்கள் மதன்லால், ஆர்.பி.சிங், இந்திய முன்னாள் வீராங்கனை சுலக்ஷனா நாய்க் ஆகியோரை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று நியமித்தது. இவர்களின் பதவி காலம் ஓராண்டாகும். இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், உறுப்பினர் ககன்கோடா ஆகியோரின் பதவி காலம் முடிந்து விட்டது. புதிய தேர்வாளர்களை அடையாளம் காணும் பணியை கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி மேற்கொள்ளும்.
* ஹராரேவில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 361 ரன்கள் இலக்கை நோக்கி கடைசி நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. குசல் மென்டிஸ் (116 ரன்) சதம் அடித்தார். 2 போட்டி கொண்ட இந்த தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
* இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 216 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி 5 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது. மார்க் சாப்மன் 85 ரன்னுடனும், டேன் கிளவெர் 111 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
Related Tags :
Next Story