‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன்’ - சென்னை டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் நம்பிக்கை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று சென்னை டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டி அணிகள் பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தகுதி பெறவில்லை. இந்த நிலையில் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் 27 வயதான சென்னை டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் அளித்த ஒரு பேட்டியில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நமது அணிகள் தகுதி பெறாவிட்டாலும், ஒற்றையர் பிரிவில் நமது வீரர், வீராங்கனைகள் தகுதி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. நான் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கிறேன். இந்த உயரிய பார்மை தொடர முயற்சிப்பேன். ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக தயாராகி வருகிறோம். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு எங்களுக்கு நிறைய போட்டிகள் இருக்கிறது. நான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு விரைவில் தகுதி பெறுவேன் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story