மாநில கூடைப்பந்து: செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’


மாநில கூடைப்பந்து: செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 1 Feb 2020 11:33 PM GMT (Updated: 1 Feb 2020 11:33 PM GMT)

மாநில கூடைப்பந்து போட்டியில், செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

சென்னை,

கல்லூரி அணிகளுக்கான மாநில கூடைப்பந்து போட்டி சென்னை குன்றத்தூரில் உள்ள சி.ஐ.டி. கல்லூரியில் நடந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணி (சென்னை) 66-32 என்ற புள்ளி கணக்கில் எஸ்.எஸ்.என்.என்ஜினீயரிங் கல்லூரியை (சென்னை) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.


Next Story