எம்.ஆர்.எப். கார் பந்தயம் பெல்ஜியம் வீரர் சாம்பியன்
எம்.ஆர்.எப். கார் பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சென்னை,
எம்.ஆர்.எப். தேசிய சேலஞ்ச் கார்பந்தயத்தின் இறுதி சுற்று சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் பெல்ஜியம் வீரர் 18 வயதான அமென்டோலா 247 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வசப்படுத்தினார்.
நேற்று நடந்த 3 பந்தயங்களிலும் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் சாம்பியன் பட்டத்திற்குரிய போதுமான புள்ளிகளை ஏற்கனவே பெற்று விட்டார். ஆஸ்திரேலியாவின் டைலன் யங் 223 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். ‘கடந்த சீசனில் 4-வது இடத்துக்கும், 2017-ம் ஆண்டில் 6-வது இடத்துக்கும் தள்ளப்பட்டேன். அதனால் இந்த முறை பட்டம் வெல்வதில் உறுதியுடன் இருந்தேன். இப்போது சாம்பியன் ஆகி விட்டேன்’ என்று அமென்டோலா குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story