இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் அசோக் சட்டர்ஜீ மரணம்


இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் அசோக் சட்டர்ஜீ மரணம்
x
தினத்தந்தி 22 Feb 2020 11:27 PM GMT (Updated: 22 Feb 2020 11:27 PM GMT)

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் அசோக் சட்டர்ஜீ நேற்று மரணம் அடைந்தார்.

* டாக்காவில் நேற்று தொடங்கிய வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கிரேக் எர்வின் (107 ரன்) சதம் அடித்தார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு பெங்களூருவில் அரங்கேறிய நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. இதில் 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய கொல்கத்தா அணி கடைசி 4 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து தோல்வியில் இருந்து தப்பியது. இன்றைய ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

* ஸ்பெயினில் நடந்து வரும் பார்சிலோனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 20-22, 12-21 என்ற நேர் செட்டில் குன்லவட் விடிட்சர்னிடம் (தாய்லாந்து) தோல்வி அடைந்தார். இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

* இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் அசோக் சட்டர்ஜீ (வயது 78) கொல்கத்தாவில் நேற்று மரணம் அடைந்தார். 1965-ம் ஆண்டு இந்திய அணிக்காக முதல்முறையாக களம் கண்ட அசோக் சட்டர்ஜீ 30 ஆட்டங்களில் விளையாடி 10 கோல்கள் அடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு இந்திய கால்பந்து சம்மேளனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Next Story