உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைபட்டியல்: சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியீடு


உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைபட்டியல்: சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியீடு
x
தினத்தந்தி 24 Feb 2020 11:27 PM GMT (Updated: 24 Feb 2020 11:27 PM GMT)

உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைபட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.


* 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 90-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)-சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன. 17 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 4 டிரா, 5 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறும்.

* மராட்டிய கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.ஒய். பட்டீல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள ரிலையன்ஸ்-1 அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று இந்திய கடற்படை அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் ரிலையன்ஸ் அணிக்காக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஹர்திக் பாண்ட்யா கடந்த 5 மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைபட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்களுக்கான ஒற்றையர் தரவரிசையில் அமெரிக்காவை சேர்ந்த 15 வயதான கோகோ காப் 2 இடங்கள் முன்னேறி 49-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் ‘டாப்-50’ தரவரிசைக்குள் இடம் பிடித்த முதல் 15 வயது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். கோகோ காப் இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 4-வது சுற்று வரை முன்னேறி இருந்தார்.


Next Story